#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாபெரும் வசூல் சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம் படம்... உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலா!!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். விக்ரம் படம் வெளியான நாள் முதல் நாளுக்கு நாள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது. விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் படம் உலகம் முழுவதும் 10 நாள் முடிவில் ரூ. 300 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் இப்படம் மாபெறும் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.