கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
என்னது! இந்த பிரபல ஹீரோவின் படம் நேரடியாக சன் டிவியிலேயே ரிலீசாகிறதா? செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் முத்தையா. இவர் குட்டிப்புலி ,கொம்பன்,கொடிவீரன் உள்ளிட்ட ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து முத்தையா தற்போது நடிகர் விக்ரம் பிரபுவை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு பேச்சி என, தலைப்பு வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது புலிக்குத்தி பாண்டியன் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது மாரி படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மேலும் டிவியிலும் ரிலீசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புலிக்குட்டி பாண்டியன் திரைப்படம் பொங்கலுக்கு நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் செய்யவுள்ளதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் தீபாவளிக்கு சுந்தர் சி தயாரிப்பில் பத்ரி இயக்கத்தில் உருவான நாங்க ரொம்ப பிசி திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ரிலீசானது குறிப்பிடத்தக்கது