கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
போதை பழக்கத்தை உறவினர்கள் கண்டித்ததால் சோகம்; விஷம் குடித்து பலி.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சொக்கநாதன்புத்தூர் பகுதியில் வசித்து வருபவர் பண்டாரம். இவரின் மகன் முருகன் (வயது 53). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்து மனைவி, மகன், மகள் இருக்கின்றனர்.
மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்ட முருகன், வேலைகளுக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், வேலைக்கு சென்றாலும், அப்பணத்தை வீட்டின் செலவுகளுக்கு தராமல், மதுபானம் அருந்தி எந்நேரமும் போதையில் இருந்து வந்துள்ளார்.
மனவேதனையில் விஷம் குடித்து மரணம்
இதனால் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அவ்வப்போது கண்டித்து அறிவுரை வழங்கி இருக்கின்றனர். பின்னாளில் இது முருகனுக்கு மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து, விஷம் குடித்து முருகன் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தையின்மை, கடன் தொல்லையால் விரக்தி; மின்கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை.!
உயிருக்கு போராடும் நிலையில் இருந்த முருகனை மீட்ட உறவினர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு முருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சேத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்ததால் சோகம்; ஜோடியாக தற்கொலை செய்து சாவு.!