கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
டீச்சர் செய்ற வேலையா இது?.. 15 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்த 22 வயது ஆசிரியை.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் வசித்து வரும் 22 வயது ஆசிரியை, கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது வீட்டில் இருந்தவாறு மாணவ-மாணவியர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார்.
சிறுவன் பலாத்காரம்
ஆசிரியையிடம் 15 வயது மாணவர் டியூசன் பயின்று வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது இருவரும் எல்லைமீறி இருக்கின்றனர். இந்த விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் சிறுவனை டியூசன் அனுப்புவதை நிறுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை.!! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!
போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
தனிமையில் நெருங்கி பழகிய இருவரும், தங்களின் செயலை கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து, மாணவனின் எதிர்காலம் கருதி கலங்கிய பெற்றோர், சிவகாசி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 22 வயது ஆசிரியையை கைது செய்தனர். மேலும், சிறுவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ள வருகிறது.
இதையும் படிங்க: இளம்பெண்ணை சீரழித்த இராணுவ வீரர்; திருமணத்திற்கு மறுத்தால் காவல் நிலையம் முன் மோதல்.!