#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாடகர் முன்பு கதறி கதறி அழுத தொகுப்பாளினி டிடி... ஏன், என்ன ஆச்சு தெரியுமா.? வைரலாகும் வீடியோ!!
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி என்று தான் கூற வேண்டும். இதனாலே இவருக்கென தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
மேலும் டிடி சிறந்த தொகுப்பாளினியாக மட்டுமின்றி சிறந்த நடிகையும் கூட. இவர் நடிப்பில் வெளியான நலதமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாளமயம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இவர் கடந்த 2014 ஆம் வருடம் தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை பின் ஒரு சில கருத்து வேறுபாட்டால் இருவரும் சட்டப்படி பிரிந்து விவாகரத்தும் செய்து கொண்டனர். பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருந்த டிடி தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து சில விசயங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிடி அப்போது பாடகர் பிரதீப் அவர்கள் தல கோதும் என்ற ஜெய் பீம் படத்தின் பாடலை பாடி இருக்கிறார். அப்போது டிடி பீல் பண்ணி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டிடியின் அந்த ரியாக்ஷனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Pradeep singing this priceless song in Super Singer Finale ft Chithra Ma’s cute clapping 🫶🏼🥹 pic.twitter.com/qg3skGPpcb
— Priya 💫 (@Padackled) December 10, 2023