கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
உதவி கேட்டு வந்த பெண் பலாத்காரம், கொலை மிரட்டல்.!! வக்கீல் மீது பரபரப்பு புகார்.!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண், வக்கீல் ஒருவரால் அவரது அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ய மாவட்ட சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
தாய் ஓய்வூதிய பணத்திற்காக வக்கீலுடன் ஆலோசனை
நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவரின் பெற்றோர் இறந்து விட்ட நிலையில் அவரது தாயாரின் ஓய்வூதிய பணம் நிலுவையில் இருந்துள்ளது. இந்தப் பணத்தை மீட்பதற்காக தோழி ஒருவரின் ஆலோசனையின் பேரில் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் ஒருவரை சந்தித்திருக்கிறார் அந்த பெண்.
அலுவலகத்திற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் கடந்த வருடம் வழக்கு தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கூறிய வக்கீல், அந்தப் பெண்ணை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: காவலர்களை அவதூறு பேசி அட்ராசிட்டி செய்த ஜோடி; கவனிப்புக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ.!
கருவை கலைத்து கொலை மிரட்டல்
மேலும் அந்தப் பெண்ணின் கருவை கலைக்க மாத்திரைகளை கொடுத்த வக்கீல் அவரது ஆபாச படங்களை வெளியிடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். தனக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கொலை செய்து விடுவதாகவும் அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த பெண் இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் காவல் நிலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருத்தணி: ஊராட்சி செயலாளர் நெஞ்சை பிடித்து சரிந்து விழுந்து மரணம்; ஊரக வளர்ச்சி ஆய்வுக்கூட்டத்தில் சோகம்.!