கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சேலம்: 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை.!! விசாரணையில் வெளியான உண்மை.!!
சேலம் மாவட்டத்தில் தலைமை காவலரின் மனைவி 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை காவலர் கோவிந்தராஜ்
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(38) என்பவர் சேலம் அரசு மருத்துவமனை அருகே உள்ள காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி சங்கீதா(34) என்ற மனைவியும் ரோஹித்(8) மற்றும் தர்ஷினி(4) என்ற 2 குழந்தைகளும் இருந்தனர்.
அடிக்கடி குடும்ப தகராறு
இந்த தம்பதியினரின் மூத்த மகன் ரோகித் அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். அவர்களது இளைய மகள் தர்ஷினி எல்கேஜி படித்து வந்தார். இந்நிலையில் கோவிந்தராஜ் மற்றும் சங்கீதா இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது.
இதையும் படிங்க: 13 வயது மாணவியை சீரழித்த இன்ஸ்டாகிராம் நண்பர்கள்.!! போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது.!!
குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கீதா
இந்நிலையில் நேற்று இரவு பணி முடிந்து கோவிந்தராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் இறந்து கடந்துள்ளனர். மேலும் அவரது மனைவி சங்கீதா தூக்கு போட்டு சடலமாக தொங்கி இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக சங்கீதா தனது குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... கூலி தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்.!! 3 நாட்கள் கற்பழிப்பு, சாதி வன்கொடுமை.!!