கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"உன் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுக்கிறேன் இரு.." கள்ளக்காதல் விவகாரம்.!! கோர முடிவு.!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை சாலையில் இழுத்து வந்த சம்பவம் மக்களை அச்சமடைய செய்திருக்கிறது. இது தொடர்பாக ஆரோக்கியதாஸ் என்ற 45 வயது நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி வெளிநாட்டில் வேலை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ்(45). இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே குடியிருப்பவர் ராமு. இவர் தின கூலியாக வேலை பார்த்து வருகிறார். ராமுவின் மனைவி புஷ்பம் அங்குள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அண்டை வீடு என்பதால் சகஜமாக பழகி வந்துள்ளனர்.
புஷ்பம் கொடூர கொலை
இந்நிலையில் நேற்று காலை புஷ்பம் வேலைக்கு சென்ற போது அவரை வழிமறித்த ஆரோக்கியதாஸ், அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து புஷ்பத்தின் உடலை தெரு வழியாக இழுத்து வந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆரோக்கியதாசை தாக்கி சடலத்தை மீட்டனர். மேலும் அவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் கொலை செய்த ஆரோக்கியதாசை கைது செய்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டை: கோவிலுக்கு சென்ற சகோதரிகளின் விதியை முடித்த எமன்; மணல் அள்ளிய பள்ளத்தில் சிக்கி துடிதுடித்து பலி.!
கொலையில் முடிந்த கள்ளக்காதல்
இது தொடர்பாக ஆரோக்கியதாஸிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் வாக்குமூலமளித்த ஆரோக்கியதாஸ் தனக்கும் புஷ்பத்திற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் புஷ்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் 2 மாதமாக தனது பணத்தை திருப்பி கேட்டும் தராமல் புஷ்பம் இழுத்தடித்ததாக தெரிவித்துள்ளார். கடனை திருப்பி கேட்ட போது தங்களுக்குள் இருக்கும் கள்ளத்தொடர்பை ஆரோக்கியதாசின் மனைவியிடம் கூறி விடுவேன் என மிரட்டியதால் புஷ்பத்தை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: தவெக மாநாட்டில் மாயம்., 74 கிமீ நடந்து வீடுவந்து சேர்ந்த சிறுவன்.. ஆரத்தழுவி கண்ணீருடன் தாய் வரவேற்பு.!