#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிடி எப் வாசனின் மஞ்சள் வீரன் படம் அவ்ளோதானா.. பட இயக்குநர் கலக்கம்.?
பிரபல யூடியூப்பரான டிடிஎஃப் வாசன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் இருந்து மகாராஷ்டிரா வரை பைக்கில் பயணம் செய்தார். அவ்வாறு பயணம் செய்கையில் பள்ளத்தில் தவறி விழுந்தார். தவறி விழுந்த அவரை மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு வழக்குகள் பதியபட்டுள்ளது. வாசனை பாலு செட்டி துறையினர் கைது செய்து மூன்று மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் இருந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அக்டோபர் மூன்றாம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி இனியா கருணாகரன் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்.
உத்தரவின் பேரில் வாசனை சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் வாசன் நடித்து வரும் "மஞ்சள் வீரன்" என்ற படத்தின் நிலை என்னவாகும் என்பது மக்களிடையே கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனரான செல்லத்தை கேட்டபோது வழக்கறிஞர்களை ஆலோசித்த பிறகு படப்பிடிப்பின் நிலை அறிவிக்கப்படும் என்று கூறினார்.