கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கொடூரம்... செல்போனில் பேச மறுத்ததால் ஆத்திரம்.!! இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை.!!
விருதுநகர் மாவட்டத்தில் செல்போன் பேச மறுத்த காதலி காட்டுக்குள் வைத்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கொலை செய்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகலட்சுமி - பீமராஜ் தம்பதி
விருதுநகர் மாவட்டம் அல்லிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. 25 வயதான இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பீமராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு சம்ரித் ராஜ் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது.
உறவினருடன் ரகசிய செல்போன் பேச்சு
நாகலட்சுமி தனது உறவினரான ராஜபாண்டி என்ற 26 வயது இளைஞருடன் செல்போனில் அடிக்கடி ரகசியமாக பேசி வந்ததாக தெரிகிறது. இந்த விஷயம் பீமராஜ்க்கு தெரிய வரவே அவர் மனைவி நாகலட்சுமி கண்டித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நாகலட்சுமி, ராஜபாண்டியுடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: பயங்கர சம்பவம்... மது போதையில் தகராறு.!! கணவனை போட்டுத் தள்ளிய மனைவி, மைத்துனர் கைது.!!
கழுத்தறுத்து படுகொலை
இந்நிலையில் நாகலட்சுமி தனது உறவினரான பிரியதர்ஷினி மற்றும் மகன் சம்ரித்ராஜ் ஆகியோருடன் வங்கிக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு வந்த ராஜபாண்டி பிரியதர்ஷினி, குழந்தை மற்றும் நாகலட்சுமி ஆகியோரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய ராஜபாண்டி பிரியதர்ஷினி மற்றும் குழந்தையை சாலை ஓரத்தில் விட்டு விட்டு நாகலட்சுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்று கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார்.
கைது செய்த காவல்துறை
காட்டுக்குள் இருந்து தனியாக வந்த ராஜபாண்டியிடம் நாகலட்சுமி எங்கே.? என பிரியதர்ஷினி கேட்டிருக்கிறார். காட்டுக்குள் சடலமாக நாகலட்சுமி கிடக்கிறார் என ராஜபாண்டி, பிரியதர்ஷினி இடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி காட்டுக்குள் சென்று பார்த்த போது கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார் நாகலட்சுமி. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பிரியதர்ஷினி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நாகலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜபாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிர்ச்சி... கள்ளக்காதலியுடன் உல்லாசம்.!! நேரில் பார்த்த முதியவருக்கு அரிவாள் வெட்டு.!!