தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
"அறிக்கை நல்லா தான் இருக்கு, ஆனா பயம் தெரியுதே" - நடிகர் விஜய்யை வம்புக்கு இழுக்கும் சவுக்கு சங்கர்.!
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் சிஏஏ இன்று முதல் நடைமுறைக்கு வந்ததாக மதிய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அரசு நாளிதழில் வெளியாகி இருக்கிறது. இதன்படி பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மியான்மார் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து 2019 ஆம் வருடம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு கேரளா மற்றும் தமிழக முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சியை தோற்றுவித்த நடிகர் விஜய் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விஜய் " சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் இலகுவாத அரசியலை முன்னிறுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த சட்டங்களும் ஏற்புடையதல்ல. தமிழக அரசு இதனை செயல்படுத்தக் கூடாது" என தெரிவித்திருந்தார்.
Dear @actorvijay
— Savukku Shankar (@SavukkuOfficial) March 12, 2024
Learn to make sharp political statements. Though your intent is right, this statement lacks the political punch and sounds timid.
React sharply to issues. https://t.co/mIToDAO9Jt
இந்நிலையில் தளபதி விஜயின் அறிக்கை எதிராக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் பிரபல அரசியல் நிபுணரும் ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவு செய்திருக்கும் சங்கர்" உண்மையான அரசியல் அறிக்கையை விட கற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் சிஏஏ சட்டத்திற்கு எதிரான அறிக்கையின் நோக்கம் சரிதான் என்றாலும் அவரது அறிக்கையில் அரசியல் பஞ்ச் இல்லை மேலும் பயப்படுவது போல் இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.