ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
மருமகளிடம் பாலியல் அத்துமீறல்.. மாமியாருடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய கண்ணகி.!

மருமகள் மற்றும் 3 பேத்திகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை அவரது மனைவி மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து கொளுத்திய சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு ராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமான நிலையில், மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். தந்தை ராஜா வெளியூரில் வேலை செய்து வந்த நிலையில் பெண் குழந்தைகள் 3 பெரும் தன் தாய் மற்றும் தாத்தா பாட்டியுடன் வளர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் தந்தை இல்லாத இடத்தில் தந்தையாக இருந்து குடும்பத்தை காக்க வேண்டிய தாத்தா சரவணன் அந்த பேத்திகளிடமும் தன்னுடைய மருமகளிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். இது மருமகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் தன்னுடைய மாமியாருடன் சேர்ந்து அந்த காமக்கொடூரன் சரவணனை தீயிட்டு எரித்து இருக்கின்றார்.
இதையும் படிங்க: கடும் வெயிலில் தவித்த முதியவர்.. உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளம்.. குவியும் பாராட்டுக்கள்.!
தற்போது சரவணன் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூர்: 10 வயது சிறுமி பலாத்காரம்., 17 வயது மாணவர் போக்ஸோவில் கைது.!