50 வயதுக்கு மேல் ஆண்களும், பெண்களும் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?..!
மதுபானம் அருந்துதல், புகைபிடித்தல், உடல் இயக்கம் இல்லாமல் இருத்தல், உணவுத்துறை குறைபாடு போன்றவை 60 % அகால மரணம் மற்றும் ஆயட்காலத்தில் 7 வருடம் முதல் 18 வருடம் வரை குறைய காரணமாக அமைகிறது. 50 வயதுக்கு பின்னர் ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றினால், ஆயுட்காலம் சிறிதளவு நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கையில் பெண்ணின் ஆயுட்காலம் 31 வருடங்கள் முதல் 41 வருடங்கள் வரை அதிகரிக்கிறது. ஆண்களுக்கு 31 வருடம் முதல் 39 வருடம் வரை நீடிக்கப்படுகிறது. புற்றுநோய், இதய பாதிப்பு, நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் இறப்பு அபாயம் குறைக்க உதவி செய்யும். நோயில்லாத வாழ்க்கை முறை ஆயுட்காலத்தை மட்டுமல்லாது, சுகாதார பிரச்சனையையும் குறைக்க உதவி செய்கிறது.
உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுதல், சுற்றுசூழலுடன் இணைந்த வாழ்க்கையை பின்பற்றுதல், கொழுப்புள்ள உணவுகளை தவிர்த்தல் போன்றவை ஆயுட்காலத்தை மேம்படுத்தும். 50 வயதுக்கு மேல் புகை, மதுப்பழக்கம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். இதன் வாயிலாக ஆயுட்காலத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது.
50 வயதுக்கு பின்னர் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பெண்கள், ஆண்களுக்கு ஒரே வகையில் இருக்கும். உடல்ரீதியான சுறுசுறுப்பு போதுமானது. வயது அதிகரிக்கும் போது தூங்கும் நேரமும் குறையும். குறைந்தது 7 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை உறங்க வேண்டும்.