அந்த மாதிரியான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுபவர்கள் , இந்த பழத்தை மறக்காம சாப்பிடுங்க.!



benefits-of-eating-wood-apple

பழத்திலேயே முதன்மையானது விளாம்பழம்தான் என அகத்தியர் கூறியுள்ளார்,ஏனெனில்  விளாம்பழம் மிக மலிவாகக் கிடைக்கக்கூடியது ஆனால் மருத்துவ குணங்கள் ஏராளமானவை கொண்டது.

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்து, சுண்ணாம்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் வரும்  தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை,  இளநரை போன்றவை குணமாகும்.

        wood apple

மேலும் விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே விளாம்பழம் சாப்பிடுவோருக்கு எந்த நோயும் தாக்காது . 

மேலும் அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் இந்த பழத்திற்கு உண்டு. 

விளாம்பழத்திற்கு சளியை அகற்றும்தன்மையும் இருக்கிறது. அதனுடன் அரை தேக்கரண்டி திப்பிலி பொடி கலந்து சாப்பிட்டால், மூச்சிறைப்பு மற்றும் மேல்மூச்சு ஏற்படுதல், விக்கல் போன்றவை நீங்கும். தொண்டை நோய்களும் குணமாகும். கல்லீரலில் உள்ள பிரச்சினைகளை போக்கும் சக்தியும் விளாம்பழத்திற்கு இருக்கிறது.

wood apple

மேலும் சிலருக்கு காம உணர்வு அதிக அளவில் ஏற்பட்டு அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்கள்  விளாம்பழத்தின் ஓட்டினைப் பொடி செய்து, அதில் உணவிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் நீா்த்துப் போகும். காம உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படும்.

அந்த மாதிரியான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை மறக்காம சாப்பிடுங்க.!