ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக்கீரையின் அற்புத நன்மைகள்.!



Benefits of pasalai keerai

கீரைகள் பொதுவாக அதிக நன்மைகளைக் கொண்டது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட கீரைகள் பல்வேறு சத்துக்களை கொடுக்கிறது. அதன்படி ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த பாலக்கீரையின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

பாலக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது. அதேபோல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Pasalai keerai

குறிப்பாக பாலக்கீரை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் அனீமியா போன்ற நோய்களில் இருந்தும் நம்மை காய்கிறது.

குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் பாலக்கீரை சாப்பிடுவதால் பால் சுரப்பு அதிகரிக்கும். பாலக்கீரையில் உள்ள காப்பர், லிங்க் மற்றும் வைட்டமின்கள் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைக்க உதவுகின்றன.

Pasalai keerai

கண் பார்வை நன்றாக தெரிய பாலக்கீரை உதவுகிறது. மேலும் பாலக்கீரை சாப்பிடுவதால் ரத்த குழாய் அடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.