மஞ்சள் கலந்த பாலை குடித்தால் உடலுக்கு எவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!



Benefits of turmeric milk

பொதுவாக உணவில் மஞ்சள் சேர்ப்பது பலவித நன்மைகளை கொடுக்கிறது. அந்த வகையில் மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளதால் பல்வேறு வகையில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.

எனவே மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து எந்த பதிவில் நாம் காணலாம். மஞ்சளில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன இது செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.

Turmeric milk

மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும், அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோயிலிருந்து மூளையில் செயல்பாடு குறைவதை குறைக்க உதவுகிறது.

மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்க பட்டை கலந்த பால் குடிப்பதால் வலுவான அழற்சியை எதிர்ப்பு பண்புகளை கொடுக்கிறது. இவை வீக்கம் மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது.

மஞ்சள் கலந்த பால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இதய நோய்களிலிருந்தும் பாதுகாக்கும் தன்மைகளை கொண்டுள்ளது.

Turmeric milk

மஞ்சள் இஞ்சி மற்றும் இலவங்க பட்டை கலந்த பால் குடிப்பதால் புற்று நோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டுள்ளது.

மஞ்சள் கலந்த பாலில் உள்ள ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மஞ்சள் கலந்த பால் அஜீரணத்தை சீராக்குகிறது. மேலும் சளி இருமல் போன்ற தொல்லையிலிருந்து பாதுகாக்கிறது.

மஞ்சள் கலந்த பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்துள்ளதால் எலும்பு நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.