மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி, யோகா செய்யலாமா?.!
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு இரத்தப்போக்கு மட்டுமல்லாது தசைப்பிடிப்பு, வயிற்றுவலி, சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரங்களில் பெண்களின் உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு அவசியம். உடற்பயிற்சியின் மீது நாட்டம் கொண்ட பெண்கள் கூட மாதவிடாய் நாட்களில் ஓய்வெடுக்க விரும்புவார்கள். இந்நாட்களில் எளிமையான, கடினம் இல்லாத உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியமான ஒன்றாகும்.
நடை :
வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைப்பயிற்சியில் வேகத்தை குறைத்து, குறைந்தளவு வேகத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கால்களுக்கு அழுத்தம் இல்லாமல், மெதுவாக நடக்க வேண்டும். காலங்கள் சோர்வு அடையாமல் சிறிது ஓய்வெடுத்து நடக்கலாம்.
வலிமைப்பயிற்சி :
உடலுக்கு வலிமையை சேர்க்கும் பயிற்சியை மேற்கொள்வது உடலையும், சரும அழகையும் அதிகரிக்க உபயோகம் செய்யும். மாதவிடாய் நாட்களில் ஆரோக்கியத்துடன் இருந்து, கடுமையான பயிற்சியை மேற்கொள்ளாமல், எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம்.
கார்டியோ பயிற்சி :
மாதவிடாய் நிறைவடையும் காலகட்டத்தில் நீச்சல், ஜாக்கிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சியை மேற்கொள்ளலாம். இது நுரையீரல் பயிற்சியாகவும் உதவி செய்கிறது.
யோகா :
மாதவிடாய் நாட்களில் கட்டாயம் யோகா மேற்கொள்ளலாம். இது, உடல் ரீதியாகவும் - மன ரீதியாகவும் பலனை அளிக்கும். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கூடுதல் கட்டாயம் பெற்றுத்தரும். உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.