வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
உடற்பயிற்சி செய்யும் போது நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள் என்னென்ன?.!
நாம் நமது உடல்நலனை பேணிக்காக்க உடற்பயிற்சி செய்வது அவசியமானது ஆகும். சிலர் ஊடகங்களில் வைரலாகும் விடியோவை பார்த்து உடற்பயிற்சி செய்வார்கள். இவை அனைவர்க்கும் சரியாக அமைவது இல்லை. சந்தேகம் இருப்பின் அதற்கான பயிற்சி நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது.
உடற்பயிற்சி செய்யும்போது சில விஷயத்தை கவனிக்காமல் இருந்தால், அவை பக்கவிளைவை உண்டாக்கும். அவை குறித்து இன்று தெளிவாக தெரிந்துகொள்ளலாம்.
உடற்பயிற்சியின்போது வியர்வை வெளியேறுவது இயல்பானது எனினும், அந்நேரங்களில் கையால் வியர்வையை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். கைகளால் வியர்வை சுத்தம் செய்தால், கைவிரல் பகுதிகளில் அழுக்கு சேரும். இதனால் கிருமிகள் சருமத்தின் வாயிலாக ஊடுருவும். வியர்வையை துடைப்பதற்கு என மென்மையான துண்டை பயன்படுத்தலாம். .
உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் இறுக்கமான மற்றும் தளர்வான கூந்தல் தொடர்பான அலங்காரத்தை மேற்கொள்ள கூடாது. ஏனெனில் உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர்வை முடி உதிர்வு, உடைத்தல் போன்றவைக்கு காரணமாக அமையலாம். உடற்பயிற்சி செய்யும்முன் தலைக்கு எண்ணெய் தேய்க்கவும் வேண்டாம்.
மேக்கப் போட்ட பின்னர் உடற்பயிற்சி செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். இவை சரும துளைகளில் அடைப்பை ஏற்படுத்தும் என்பதால், வியர்வை தடுக்கப்பட்டு முகப்பரு, ஒவ்வாமை உண்டாகும். அதேபோல, வாசனை திரவியங்களையும் பயன்படுத்த வேண்டாம். இவை சிலநேரம் வியர்வையுடன் கலந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும்.