மகன் நீட் ஆள்மாறாட்டம், தந்தை போலி மருத்துவர்! அந்த கிளீனிக்கில் பல நோயாளிகள் சிகிச்சை! பதறும் பொதுமக்கள்!
நீட் ஆள்மாறாட்டத்தில் உதித் சூர்யா என்ற ஒரு மாணவர் சிக்கியதைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து பல மாணவர்கள் கைதாகிவருகின்றனர். சமீபத்தில் இர்ஃபானை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் சேலம் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நேற்று ஆஜரானர். ஆஜரான இர்ஃபானை அக்டோபர் 9 ஆம் தேதிவரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட இ ர்ஃபான் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்தநிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவரை மருத்துவ படிப்பு படிக்க வைக்க நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறி அவரது தந்தை மருத்துவர் முஹம்மத் ஷஃபியை சிபிசிஐடி போலீசார் இரண்டு தினங்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இர்ஃபானின் தந்தை முகமது ஷபி போலி மருத்துவர் என்பதும், வாணியம்பாடி பகுதியில் அவர் போலியாக இரண்டு கிளீனிக்களை நடத்தி வந்ததாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் நடத்திவரும் கிளீனிக்கில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையிலும் இவரது மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இடைத் தரகர் ரசீத் மூலம் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் முகமது சஃபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.