#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டு செல்ல குட்டீசின் அறிவாற்றலை மேம்படுத்த என்ன செய்யலாம்?.. ஆலோசனை இதோ..!
நமது வீட்டில் உள்ள செல்ல குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க, அவர்களின் வளரும் பருவத்தில் இருந்தே அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். குழந்தைகள் விளையாடும் நேரத்திலேயே அவர்களுக்கு விளையாட்டாக சில பயிற்சிகளையும் பழக்கப்படுத்தலாம்.
கேள்வி + ஊக்கம் :
குழந்தையின் அறிவுத்திறனை மேம்படுத்த அவர்களின் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்க வேண்டும். கேள்வி எழுப்பும் முன்பு, அதுசார்ந்த விஷயத்தில் தெளிவுபடுத்த கற்றுக்கொடுக்க வேண்டும்.
பாடம் எடுக்கும் பட்சத்தில், அந்த பாடத்தினை முதலில் ஆழ்ந்து படித்துவிட்டு, அதில் எழும் சந்தேகத்தை கேள்வியாக கேட்கலாம். இதனால் சிக்கலான விஷயத்தில் இருந்து தீர்வு காணும் திறன் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும்.
செயல்வழிக்கல்வி :
குழந்தைகளை ஒரேயொரு இடத்தில் அமர வைத்து கற்றுக்கொடுப்பது, அவர்களுக்கு லேசான வெறுப்புணர்வை ஏற்படுத்தலாம். இதனால் நினைவாற்றல் பெருமளவு மேம்படாது. குழந்தைகளின் இளம் பருவத்தில் விளையாட்டுடன் கற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும். ஏதேனும் ஒரு தலைப்பை கொடுத்து, அதில் இருந்து குழந்தைகளின் கருத்துக்களை கேட்கலாம்.
படமாக மாற்றலாம் :
ஒரு விஷயத்தை குழந்தைகளுக்கு வரி வடிவில் கூறாமல், திரையில் தோன்றும் படமாக பார்த்து பதில் அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் குழந்தையும் சொல்லும் விஷயத்தை மனதில் பதியவைக்கும்.
இதனைப்போல, நினைவாற்றலை மேம்படுத்த சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உதாரணமாக கூறுவது, குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்ததை நண்பர்களுக்கு பயிற்றுவிக்க வைப்பது, வரைபடத்தை உருவாக்கி பயிற்சி அளிப்பது போன்றவை குழந்தைகளின் தனித்திறன், நினைவாற்றல் போன்ற பல பண்புகளை உயர்த்தும்.