#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடல் சூட்டை குறைத்து., உடலை குளிர்ச்சியாக்கும் கேழ்வரகு கோதுமை தோசை.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!
பல்வேறு சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு கோதுமை தோசை எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேழ்வரகில் அதிக இரும்புச்சத்து இருப்பதால், உடலுக்கு வலிமையளிக்கிறது. மேலும் ரத்த சோகை வராமல் தடுக்கும். சிலருக்கு உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். அவர்கள் கேழ்வரகு சாப்பிடுவது மிகவும் நல்லது. அத்துடன் கேழ்வரகு மற்றும் கோதுமை சாப்பிடுவதால் உடல் சூட்டை குறைத்து, உடல் குளிர்ச்சியடைய உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1/4 கப்
கேழ்வரகு மாவு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, பச்சை மிளகாய், வெங்காயம், சீரகம், கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
★இறுதியாக தோசைக்கல் அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள தோசை மாவை தோசைகளாக ஊற்றி திருப்பி போட்டு எடுத்து பரிமாறினால் சுவையான கேழ்வரகு கோதுமை தோசை தயாராகிவிடும்.