உஷார்.. பகல் முழுவதும் தூங்கிவழிபவரா நீங்கள்?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! இந்த பிரச்சனைகள் தான் காரணமாம்..!!



Sleeping Tips Tamil Day Work

 

தற்போதைய காலகட்டத்தில் பணிசுமை, செல்போன் அதிகநேரம் பயன்படுத்துதல், மனக்கவலை போன்றவற்றால் பலரும் இரவு தூங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாள் முழுவதும் தூக்கம் வருவது போன்ற உணர்வை உண்டாக்கும். இரவில் நன்றாக தங்குவது பகல்முழுவதும் அரைதூக்கத்தில் இல்லாமல் தெளிவாக இருக்க உதவும். 

ஆனால் சிலருக்கு இரவு நன்றாக தூங்கினாலும், அரை தூக்க நிலையில்   இருப்பர். இதனை போக்க பலரும் கஃபைன் பானங்களை குடிப்பர். ஆனால் அது உடலுக்கு நல்லதல்ல. பதற்றம் மற்றும் கவலையை உருவாக்கும். எனவே அரைதூக்க நிலைக்கான காரணத்தை கண்டறிந்து முறையாக சிகிச்சை பெற வேண்டும். அவற்றின் சில காரணங்கள் குறித்து தற்போது காணலாம்.

மன ஆரோக்கியம் :

சிலர் மனநலபிரச்சனையின் காரணமாக தூங்க முடியாமல் அவதிப்படுவர். அவர்கள் எப்பொழுதும் ஒருவித அரைதூக்க நிலையில் இருப்பது மனப்பதற்றம் மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

தூக்க கோளாறு :

தூக்ககோளாறு உள்ளவர்களும் ஒருவித மயக்கநிலையில் எப்பொழுதும் இருப்பார்கள். இந்த பிரச்சனை உள்ளவர்கள் சரியாக தூங்க இயலாது இது பல பிரச்சனைகளுக்கும் அடித்தளமாகிவிடும்.

வாழ்க்கை முறை :

அரை தூக்கநிலைக்கு வாழ்க்கைமுறை மிக முக்கிய காரணமாகும். இரவில் நீண்டநேரம் வேலைசெய்தல் அல்லது சில மணிநேரங்கள் மட்டுமே தூங்குதல் போன்றவை தூக்க நிலையை ஏற்படுத்தும்.

குறிப்பிட்ட மருந்துகள் :

உடல்நல பிரச்சினைகளுக்காக சிலர் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வது உண்டு. இது பகலிலும் ஒருவிதம் மயக்கம் போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதிக டோஸ் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் பிரச்சனையை உண்டாக்கும்.