இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
குடல் புண்களுக்கு அருமருந்தாகும் வெந்தயக்கீரை சாதம்; செய்வது எப்படி?.!
வைட்டமின், தாது உப்பு உட்பட பல்வேறு சத்துக்களை கொண்டது வெந்தயக்கீரை. இதனை சமைத்து சாப்பிட்டால் சீரண சக்தி மேம்படும், சொறி-சிரங்கு நீக்கப்படும், பார்வைக்கோளாறு சரியாகும், காசநோய் குணமாகும், உடல் சுத்தமாகும், குடல் புண்கள் குணமாகும், பித்த கிறுகிறுப்பு, வயிறு உப்பிசம், பசியின்மை உட்பட பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும். வெந்தய கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர தொண்டைப்புண், வாய்புண் குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். வெந்தயக்கீரையை தேங்காய், முட்டை சேர்த்தும் சாப்பிடலாம். இன்று வெந்தய கீரையில் சாதம் செய்து அசத்துவது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்,
வெந்தயக்கீரை - 2 கட்டு,
தக்காளி - 2,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிதளவு,
பூண்டு - 4 பற்கள்,
பச்சை மிளகாய் - 3,
மஞ்சள் தூள், மிளகாய்தூள் - அரை கரண்டி,
கரம் மசாலா, தனியாதூள், சீரகத்தூள் - 1 கரண்டி,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: இத்துப்போன ஸ்க்ரப்பர்களை பயன்படுத்துறீங்களா? இல்லத்தரசிகளே உங்களுக்குத்தான் இந்த அறிவுரை.!.
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட வெந்தயக்கீரை இலைகளை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் வெங்காயம், தக்காளி , இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நசுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு குழைய வதங்கியதும் கீரையினை சேர்த்து வதக்க வேண்டும். கீரை வதங்க தொடங்கியதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியா தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துவதக்க வேண்டும். மசாலா வாசனை போனதும் இதனுடன் 1 டம்ப்ளர் அரிசிக்கு 2 டம்ப்ளர் தண்ணீர் வீதம் சேர்த்து உப்பு சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
பின் 2 முதல் 3 விசில் வந்ததும் இறக்கி, ஆவி வெளியேறியதும் திறந்தால் சுவையான வெந்தயக்கீரை தயார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. மீன் இறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.!