குழந்தைகளை குப்புற படுக்க வைக்கக்கூடாது ஏன்?..!



 Why not put Down children to bed

நமது வீடுகளில் கட்டாயம் குழந்தை செல்வங்கள் இருப்பார்கள். அவர்களை உட்கார வைக்கவும், உறங்க வைக்கவும், அவர்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது என பல்வேறு விஷயங்களில் பல நுணுக்கங்கள் உள்ளது. அன்றைய காலத்தில் வீட்டில் பாட்டி, தாத்தா என மூத்தோர்கள் இருந்ததால், குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்பட்டார்கள். பெற்றோர்களுக்கு தெரியாத நுணுக்கத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். 

health tips

குழந்தைகளை உறங்க வைக்கும் நிலை என்பது கட்டாயம் அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகளை குப்புறப்படுத்து உறங்க வைப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தையின் உடல் எடை, அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதன் காரணமாக திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும். 

health tips

குழந்தையை மல்லாக்கபடுக்க வைப்பதே சிறந்த செயல்முறை ஆகும். இப்படி குழந்தைகள் படுத்து இருப்பதால், மேற்கூறிய ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் 50 % குறையும். ஆனால், குழந்தைகள் ஒருநாளில் 90 நிமிடம் வரை குப்பற படுத்து இருக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு 50 % இந்த ஆபத்து குறையும். மேலும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது, கட்டாயப்படுத்தி அவர்களுக்கு பால் கொடுக்க கூடாது. 

குழந்தைகள் தாய்ப்பால் குடித்த பின்னர், குழந்தைகள் ஏப்பம் விடுத்த பிறகு அவர்களை படுக்கையில் படுக்க வைக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை ஆகும்.