காவல்துறை உதவி ஆய்வாளர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை; கோவையில் சோகம்.!



in Coimbatore SUb Inspector Dies by SUicide

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ.உ.சி மைதானத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சொக்கலிங்கம் (வயது 54). இவர் நேற்று இரவு நேரத்தில், புங்கை மரம் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று இரவில் கண்காணிப்பு பணியில் இருந்த காவலர்கள், சொக்கலிங்கம் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து தகவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Coimbatore

மறைந்த காவல் உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம், பயங்கரவாத தடுப்பு பிரிவில், கடந்த 2024 ல் இருந்து பணியாற்றி வைத்துள்ளார். 1997 ல் இருந்து காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக கோவை பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: கோவை: 21 மாணவ-மாணவிகளுக்கு பொன்னுக்கு வீங்கி பாதிப்பு; தனியார் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.!

இதையும் படிங்க: கோவை: மூட்டுவலி சிகிச்சைக்கு சென்ற இளைஞரிடம் சல்லாப உறவு முயற்சி..மசாஜ் செண்டரில் பலான தொழில்.. பெண்கள் மீட்பு.!