ஈரோடு: விளையாட்டின்போது சிறுவனுக்கு பாம்பு வடிவில் வந்த எமன்; மகனை இழந்து கதறித்துடிக்கும் பெற்றோர்.!



in Erode Perundurai Minor Boy Dies Snake Bite 

 

நண்பரின் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் பாம்பு தீண்டி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, கருக்கங்காட்டூர் பகுதியில் வசித்து வருபவர் சதிஷ் குமார். இவரின் மகன் கெளதம் (வயது 10). சிறுவன் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில், நான்காம் வகுப்பு பயின்று வந்தார்.

இதையும் படிங்க: ஈரோடு: நண்பர்களின் இழப்பை தாங்க முடியாமல், 28 வயது இளைஞர் தற்கொலை.. பெற்றோர் கண்ணீர்.!

நேற்று முந்தினம் வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற கெளதம், பின் மீண்டும் மாலை நேரத்தில் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். பின் விளையாட அங்குள்ள காலி மைதானத்திற்கு சென்றுள்ளார். 

erode

சிறுவன் பலி

மற்றொரு சிறுவனுடன் கெளதம் விளையாடியபோது, புதர் பகுதியில் பதுங்கியிருந்த பாம்பு ஒன்று, கௌதமை கடித்தது. இதனால் வலியால் துடித்த சிறுவனின் அலறிய சத்தம் கேட்டு வந்த பெற்றோர், சிறுவனை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

பின் மேல் சிகிச்சைக்காக சிறுவன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: #Breaking: அதிமுக கூட்டத்தில் சலசலப்பு.. நாற்காலி வீசி தாக்குதல்.. முன்னாள் அமைச்சர் முன் பரபரப்பு சம்பவம்.!