துணிதுவைக்கச் சென்ற பெண்களுக்கு ஏரியில் காத்திருந்த எமன்; இளம்பெண்கள் மூவர் நீரில் மூழ்கி பலி.!



in Karnataka Davanagere 3 Women Death

கர்நாடக மாநிலத்தில் உள்ள தவணகெரே மாவட்டம், சென்னகிரி, லட்சுமி சாகர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் தீபா (23), திவ்யா (23), சந்தனா (19). மூவரும் தோழிகள் ஆவார்கள். கிராமத்தில் ஏரி ஒன்று இருக்கிறது. தோழிகள் மூவரும் துணி துவைக்க சென்றனர்.

அப்போது, நீரில் இறங்கி குளித்தபோது, எதிர்பாராத விதமாக மூவரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதனால் நீரில் மூழ்கி அவர்கள் தவிக்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஏரி பகுதியில் ஆட்களும் இல்லாமல், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

karnataka

துணிகள் கரையோரம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன், நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தேர்வுக்கு பயந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த 17 வயது சிறுவன்; 12 நாட்களுக்கு பின் மீட்பு.!

இதையும் படிங்க: செல்போன் பயன்படுத்த அனுமதிக்காததால் ஆத்திரம்; தாய்-தந்தை, அக்கா கல்லால் அடித்துக்கொலை.. இளைஞன் வெறிச்செயல்.!