#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
ஒவ்வொரு நாளும் நரகம்.. கணவனின் கொடுமையால் குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கண்ணீர் சோகம்.!

கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், பேரொலி பகுதியில் வசித்து வருபவர் ஷைனி (வயது 42).இவரின் கணவர் லோபி லுகோஸ் (வயது 44). தம்பதிகளுக்கு அலினா (11), இவனா (10) என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இதனிடையே, லோபி தனது மனைவி சைனியை அவ்பது அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், அம்மாவை பாதுகாக்க அலறியபடி வரும் மகள்களையும் தாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: மழலை மொழியில் அங்கன்வாடியில் பிரியாணி கேட்டு கோரிக்கை; அமைச்சரின் அசத்தல் பதில்.!
பி.எஸ்.சி நர்சிங் பயின்றுள்ள சைனி செவிலியராக வேலை பார்க்க விரும்பி இருக்கிறார். இந்த விசயத்திற்கு லோபி எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரை உடல்-மனரீதியில் கணவர் துன்புறுத்தி இருக்கிறார்.
தாய்-மகள்கள் தற்கொலை
இதனால் பெண்மணி விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனு விசாரணையின்போது லோபி மனைவி, குழந்தைகளுக்கு தொல்லையாக இருந்துள்ளார்.
இந்த விஷயத்தால் உச்சகட்ட மனவேதனை அடைந்த சைனி, கடந்த பிப். 28 நன்று தனது மகளுகளுடன் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள், தலைமறைவான லோபியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரித்தபோது உண்மை அம்பலமானது.
இதையும் படிங்க: ரூ.50 இலட்சம் நஷ்டத்தால் சோகம். மனைவி, குழந்தைகள் மரணம்., கணவன் கடிதம் எழுதி வைத்து மாயம்.!