தூத்துக்குடி: 4 மணிநேரம் மருத்துவர் இன்றி துடிதுடித்த கர்ப்பிணி.. பனிக்குடம் உடைந்து தாய்-சேய் துள்ளத்துடிக்க பலி.!



in Thoothukudi a pregnant Lady Dies 

உரிய சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தால், கர்ப்பிணி பெண் மற்றும் அவரின் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபாடு கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண் ஜகீரா (வயது 31). திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் கோபி (வயது 36). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் அன்புக்கு அடையாளமாக 4 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். 

கேரளா மாநிலத்தில் விவசாய பணிகளை கவனித்து வந்த கோபி-ஜாகிரா தம்பதிக்கு, இரண்டாவது குழந்தை பிரசவத்துக்கு பெண் தாய் வீடு வந்துள்ளார். தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கும் சென்று வந்தார். 

இதையும் படிங்க: 7 வயது சிறுவன் கண்மாய் நீரில் மூழ்கி பலி.. பெற்றோர் கண்ணீர்.!

pregnant

இரண்டாவது குழந்தை

இந்நிலையில், நேற்று பெண்ணுக்கு அதிகாலை நேரத்தில் பிரசவ வலி ஏற்படவே, குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜகீராவை அழைத்து சென்றனர். அங்கு 4 மணிநேரத்திற்கு மேலாக மருத்துவர் இன்றி செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். 

அச்சமயம் திடீரென மூச்சுத்திணறலை எதிர்கொண்ட ஜாகிரா, பனிக்குடம் உடைந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனை வரும் வழியிலேயே தாய், சிசு உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

மருத்துவர்கள் இல்லை

மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாதது, செவிலியர்கள் மருத்துவர்கள் இல்லாததை தெரிவிக்காமல் அலட்சியப்படுத்தியதே ஜாகிராவின் மரணத்திற்கு காரணம். சிசுவும் உயிரிழந்துவிட்டது என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காலை 6 மணிக்கு மருத்துவமனையில் அனுமதித்து, 10 மணிவரை மருத்துவர்கள் வரவில்லை என கூறப்படுகிறது. 

ஆனால், சுகாதாரத்துறை தரப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் ராமலட்சுமி, விக்னேஸ்வரமூர்த்தி பணியில் இருந்தார்கள். பனிக்குடம் உடைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: குழந்தை பிறந்த 10 வது நாள்.. மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த இளம்பெண் மரணம்.. குடும்பத்தினர் கண்ணீர்.!