"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
10 மாணவர்கள் பரிதாப பலி!. 70 மாணவர்கள் சென்ற பேருந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கோர விபத்து!.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் 70 மாணவர்கள் தனியார் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அஹ்வா என்ற இடத்தில் பேருந்து சென்றுகொண்டிருந்த பொழுது அங்கிருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் பேருந்து தலைகீழாக கவிழ்ந்தது.
அதில் பயணித்த 10 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான 8 முதல் 16 வயது வரை உள்ள மற்ற மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நீண்ட நாள் தனியார் பயிற்சியில் இருந்து மாணவர்கள் சுற்றுலாவிற்கு அந்த பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு சுவற்றில் மோதி 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.
அந்த பேருந்தில் சென்ற அனைத்து மாணவர்களும் சூரத் நகரில் உள்ள அம்ரோலி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. காயமடைந்த அணைத்து மாணவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.