தன்னை ட்ரோல் செய்த யூடியூபர்களுக்கு எதிராக நீதிமன்ற சம்மன் வழங்கிய 10 வயது சிறுவன்; யார் இந்த அபினவ் அரோரா.!



10-year-old Abhinav Arora complaint against 7 YouTubers through his lawyer

 

ட்ரோலர்கள் அதிகரித்ததால், அதற்கு காரணமாக இருந்த யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் வசித்து வரும் எழுத்தாளர் தருண் ராஜ். இவருக்கு அபினவ் அரோரா என்ற 10 வயது மகன் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, சிறுவன் அபினவ் அரோரா கிருஷ்ணர் மற்றும் ராமரின் புராணங்களை கேட்டறிந்து, ஆன்மீக கருத்துக்களை பகிரும் நபராக கவனிக்கப்படுகிறார். 

இதையும் படிங்க: அப்பாவி இளைஞர்களை காவல் நிலையத்தில் வைத்து லாடம் கட்டிய கான்ஸ்டபிள்; கொடூரமாக தாக்குதல்.!

இவரின் பல பக்தி சார்ந்த விடியோக்கள் அங்குள்ள வட்டாரங்களில் மிகப்பிரபலம் எனபகூறப்படுகிறது. இதனால் அவர் குழந்தை துறவி எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். அவ்வப்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று பணிவிடை செய்வது போலவும் இவர் வீடியோ வெளியிட்டு வந்தார். 

10 இலட்சம் பின்தொடர்பாளர்கள்

10 வயதாகும் சிறுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் அவர் சுவாமி ராமபத்ராச்சார்யாவை சந்தித்தபோது, அவர் மேடையில் இருந்து இறங்க சொன்னதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒருசில யூடியூப் பக்கத்தில் அபினவுக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

சிறுவன் புகார்

இதனால் அதிருப்தியடைந்த சிறுவன், நேற்று மதுரா நீதிமன்றத்திற்கு சென்று தனக்கு எதிராக கருத்துக்களை பரப்பிய 7 யூடியூப் சேனலுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மேலும், தனது வழக்கறிஞர் சார்பில் சம்மனையும் அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், யூடியூபர்கள் தன்னை மிரட்டுவதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்து இருக்கிறார். 

ஒருசில யூடியூப் பக்கத்தில் வெளியான விடியோவை வைத்து, சிறுவனை பலரும் ட்ரோல் செய்து வந்த நிலையில், அதற்கு காரணமாக அமைந்த யூடியூபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஜிம் பயிற்சியாளருடன் கள்ளக்காதல்.. "கழுத்தில் ஒரே பன்ச்".. தொழிலதிபர் மனைவி எரித்துக்கொலை.!