தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஐஏஎஸ் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் 13 வயது சிறுவன்; அடடே என்ன ஒரு ஆர்வம்!
தெலுங்கானாவைச் சேர்ந்த அமர் என்ற 13 வயது சிறுவன் Learn with Amar என்ற யூடியூப் சேனல் மூலம் ஐஏஎஸ் தேர்விற்காக தயார் செய்பவர்களுக்கு பயனுள்ள வீடியோக்களை உருவாக்கி பயிற்சி அளித்து வருகிறார். இதுவரை 2.26 லட்சம் பேர் இவரது வீடியோக்களை பின்பற்றுகின்றனர்.
தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அமர் தெலுங்கானாவில் மாஞ்செரியல் என்ற ஒரு சிறிய நகரத்தில் பிறந்தவர். இவரது தந்தை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அமர் 10 வயதிலேயே தன்னுடைய தந்தையின் உதவியுடன் இந்த யூடியூப் சேனலை துவங்கியுள்ளார்.
அமர் தற்பொழுது புவியியல் சம்பந்தமான வீடியோக்களை ஐஏஎஸ் அதிகாரிகளுக்காக உருவாக்கி வருகிறார். இந்த வீடியோவில் ஒவ்வொரு நாட்டில் உள்ள ஆறுகள் மற்றும் முக்கியமான இடங்களை எளிய முறையில் எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்று கற்றுத் தருகிறார். மேலும் கூடிய விரைவில் பொருளியல் மற்றும் அரசியல் அறிவு குறித்த வீடியோக்களையும் உருவாக்க உள்ளார்.
அமருக்கும் எதிர்காலத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். இந்தியாவில் பல்வேறு நல்ல சட்ட திட்டங்கள் இருப்பதாகவும், ஆனால் அதனை யாரும் கடை பிடிப்பதில்லை என்றும் கூறியுள்ள அமர், தான் ஐஏஎஸ் அதிகாரியான பின் மக்களை அவற்றை கடைப்பிடிக்க வைப்பேன் என கூறியுள்ளார்.
தற்பொழுது அமரின் இளைய சகோதரரும் அவருக்கு துணையாக ஒரு சில வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டுள்ளார். இது குறித்து அமரின் தந்தை கூறுகையில், தன்னுடைய பிள்ளைகள் படித்து அறிவில் வளர்ந்து அவர்களது லட்சியத்தை அடைய வேண்டும் என்பதே எனது விருப்பம் என கூறியுள்ளார்.