#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
185 கி.மீ. வேகத்தில் சூறை காற்று.! பெரும் சேதத்தை ஏற்படுத்திய ‘டவ்தே’ புயல்.! 14 பேர் பலி.!
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதியையொட்டிய பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. கேரளா, கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்தது. இந்த புயல் மும்பை கடல் பகுதி வழியாக சென்று இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் இந்த புயலானது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து புயலை எதிர்கொள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பேரிடர் மீட்பு படையினர், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்தநிலையில், குஜராத் மாநிலம் போர்பந்தர் மஹூவா இடையே டவ்தே புயல் நேற்று இரவு கரையை கடந்தது. அப்போது மணிக்கு 185 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதன்காரணமாக மும்பையில் நேற்று 120 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசியது. இடைவிடாமல் பெய்த மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Evening visuals of fallen trees and a pole blocking roads in Gujarat's Una city (17.05)#CycloneTauktae pic.twitter.com/xgwp707ZLD
— ANI (@ANI) May 17, 2021
புயல் காரணமாக மகாராஷ்டிராவில் மொத்தம் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த புயல் காரணமாக கர்நாடகத்தில் பல கிராமங்கள் பாதிப்பை சந்தித்தது. அந்த மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 8 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் புயலுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.