தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இளைஞர்களை கவர மாதம் 15 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கிய முதல்வர்! எதிர்க்கட்சிகள் கண்டனம்!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களை கவர புதிய புதிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அதாவது தற்போது உலகம் எங்கும் டேட்டா பேக் அதிகரித்துள்ள நிலையில் மாதம் 15 ஜிபி இண்டர்நெட் இலவசமாக வழங்குவதாக புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பயண டிக்கெட் இலவசம் என்ற திட்டத்தை வெளியிட்டார். அதன்படி பேருந்தில் மட்டுமே அதனை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
ஆனால் ரயிலில் அத்திட்டம் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுவதால் மெட்ரோ ரயிலில் மட்டும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது புதிதாக இளைஞர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது டெல்லியின் 11 ஆயிரம் இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளது. அதனை பயன்படுத்தி மாதம் 15 ஜிபி இண்டர்நெட்டை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பை விடுத்துள்ளார். இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் விரைவில் சட்டசபை தேர்தல் நடைப்பெற இருப்பதால் மக்களை கவர இப்படி போன்ற அறிவிப்புகளை விடுப்பதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தேர்தல் வாக்குறுதியில் வெளியான வாக்குறுதி என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.