#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு சென்றபோது நேர்ந்த பெருந்துயரம்.! பரிதாபமாக பறிபோன 25 உயிர்கள்!! அதிர்ச்சி சம்பவம்.!
திருமண விழாவிற்கு சென்ற போது பஸ் கவிழ்ந்து 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து நேற்று திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக 50-க்கும் மேற்பட்டவர் பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு பஸ்ஸில் பயணம் மேற்கொண்டுள்ளனர். பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டு இருந்துள்ளது.
இந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு பஸ் சிம்ரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்த ஊர்மக்கள், போலீசார் மற்றும் மீட்புப்பணியினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளர்.
ஆனால் இந்த பயங்கர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 21பேர் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.