#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் செய்தது அவ்வளவு மோசமான காரியம்! விபரீத முடிவெடுத்த இளம்பெண்! சிக்கிய கடிதத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்!
மத்தியப் பிரதேச மாநிலம் கவதர்னா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நிஷா. 35 வயது நிறைந்தவர் இவர் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்பொழுது உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று அவரது குடும்பத்தார்களிடம் சிக்கியுள்ளது. அதில் நிஷா, அப்பா நான் நிறைய பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன். அதனை என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. மேலும் எனது முகத்தை கூட வெளியில் காட்டவோ அல்லது மறைக்கவோ முடியவில்லை. அதுபோன்ற காரியத்தை தான் நான் செய்துள்ளேன்.
எனது மரணத்திற்கு அனூப் என்பவர்தான் காரணம். அவர் பண ரீதியாகவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை மிகவும் துன்புறுத்தினார் என எழுதியுள்ளார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அனூப் என்பவரிடம் நிஷா 41 ஆயிரம் பணத்தை கடனாக வாங்கி, திருப்பிக் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் பணத்தை திருப்பி தர முடியவில்லை எனில் தன்னுடன் தவறான உறவில் இருக்குமாறு அனூப் நிஷாவை வற்புறுத்தியுள்ளார். மேலும் சில வீடியோக்கள், போட்டோக்கள் போன்றவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த நிஷா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அனூப் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.