#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பரபரப்பு தீர்ப்பு.! தன் பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் 4 மாறுபட்ட தீர்ப்புகள்.!
ஆண் மற்றும் பெண்களுக்கு இடையேயான திருமணங்களைப் போலவே தன் பாலின ஈர்ப்பு திருமணங்களும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன சட்ட அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களால் சட்டத்தை உருவாக்க முடியாது எனவும் சட்டத்தில் இருக்கக்கூடிய ஷரத்துகளை தான் கையாள முடியும் எனவும் தலைமை நீதிபதி சந்திராகுட் தெரிவித்துள்ளார்.
200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கப்படாத விஷயங்கள் தற்போது ஏற்கப்படுகின்றன என தெரிவித்திருக்கும் நீதிபதி, தன் பாலின ஈர்ப்பு அல்லது ஓரினச்சேர்க்கை என்பது சமூகத்தில் உயர்ந்த மக்களுக்கு மட்டும் உள்ளது அல்ல என்றும் இவை பொதுமக்களுக்கான அடிப்படை உரிமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கின்ற பொறுப்பு நீதிமன்றங்களுக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.