மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுஜித்தை தொடர்ந்து, 300 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 6 வயது சிறுவன்! தற்போதைய நிலை என்ன? வெளியான பகீர் சம்பவம்!
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்வான் என்ற கிராமம்.அங்கு 6 வயது சிறுவன் ஒருவன் நேற்று 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சற்றும் காலம்தாழ்த்தாமல் சிறுவனை 300 அடி ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கும் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நீண்ட நேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை பத்திரமாக உயிருடன் மீட்டுள்ளனர் . அதனை தொடர்ந்து சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அங்கு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறுவனின் உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லை மிகவும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டதால் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.