#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடிபட்ட கோழி குஞ்சை காப்பாற்ற மருத்துவமனைக்கு விரைந்த சிறுவன் - நெகிழ வைக்கும் சம்பவம்!
மிசோரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன், கையில் ஒரு அடிப்பட்ட கோழி குஞ்சை தூக்கிகொண்டும் கையில் பணத்துடனும் மருத்துவமனைக்கு வந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.
மிசோரத்தை சேர்ந்த டெரிக் என்ற 6 வயது சிறுவன் தன் வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டி விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக பக்கத்து வீட்டுக்காரரின் கோழி குஞ்சு ஒன்று அடிப்பட்டுவிட்டது.
இதனைக் கண்டு பதறிப்போன அந்த சிறுவன் உடனடியாக வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டும், அடிப்பட்ட கோழிகுஞ்சை தூக்கிக்கொண்டும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு விரைந்துள்ளான்.
இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் சிறுவனை ஆச்சர்யத்துடன் பார்த்ததும் இல்லாமல் அவனை புகைப்படம் எடுத்து இணையத்தில் பரப்பினர். மேலும் சிறுவனின் இந்த மனிதநேய செயலை பாராட்டி அவனது பள்ளியில், வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு வழங்கும் விருதினை வழங்கியுள்ளனர்.