#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மத்தியப்பிரதேசம்: 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுவன்... கதறி துடிக்கும் பெற்றோர்...
மத்தியப்பிரதேசம் மாநிலம் பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தை சேர்ந்தவர் தன்மயி சாகு என்ற 8 வயது சிறுவன். சிறுவன் தனது சகோதரியுடன் நேற்று வயல்வெளியில் விளையாடி கொண்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மாலை 5 மணியளவில் சிறுவன் தன்மயி அருகில் இருந்த 400 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்ததாக சிறுவனின் சகோதரி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் உடனே மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 55 வது அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ள நிலையில் நேற்று மாலை தொடங்கிய மீட்பு பணி 19 மணி நேரம் கடந்தும் தொடர்ந்து வருகிறது.