#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொடிய சோகம்... காதலனின் கண் முன்னே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு.. 3 இளைஞர்கள் அதிரடி கைது.!
ராஜஸ்தான் மாநிலத்தில் காதலனின் கண் முன்னே காதலி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று நபர்களை கைது செய்து விசாரித்து வருகிறது காவல்துறை.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து சனிக்கிழமை காலை தனது காதலனுடன் புறப்பட்ட 17 வயது சிறுமி அன்று இரவு 10:30 மணி அளவில் ஜோத்பூர் நகரை வந்தடைந்திருக்கிறார். பின்னர் அறை எடுப்பதற்காக ஒரு ஹோட்டலை அணுகிய போது அங்கிருந்த நிர்வாகி சிறுமியிடம் ஆபாசமாக நடந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வெளியேறிய ஜோடி அறை எடுப்பதற்காக சுற்றித்திரிந்துள்ளனர். இந்நிலையில் சமந்தர் சிங் பதி, தர்மபால் சிங் மற்றும் பட்டம் சிங் ஆகியோர் இவர்களுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்கி கொடுத்து உதவியிருக்கின்றனர்.
மேலும் அவர்களது கஷ்டத்திற்கு உதவுவதாக கூறிய அந்த மூன்று பேரும் ரயில்வே நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி ஜோத்பூரில் இருக்கும் விகாஸ் பல்கலைக்கழகத்தின் பழமையான கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த காதலனை பிணை கைதியாக பிடித்து வைத்து அந்தப் பெண்ணை மூன்று பேரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதிகாலை நேரம் வாக்கிங் செல்பவர்கள் பல்கலைக்கழக மைதானத்திற்கு வரவே அங்கிருந்து குற்றவாளிகள் தப்பி சென்று விட்டனர்.
இதனைத் தொடர்ந்து வாக்கிங் சென்றவர்களிடம் அந்த சிறுமியின் காதலன் உதவி கோறவே அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த குற்றவாளிகள் மூன்று பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அந்த சிறுமியிடம் ஆபாசமாக பேசிய ஹோட்டல் நிர்வாகியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் காவல்துறையிடம் உத்தரவிட்டிருக்கிறார்.