மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவை உலுக்கிய மற்றும் ஒரு தீ விபத்து... 16 தீயணைப்பு வாகனங்கள் பெரும் தீயை அணைக்க போராட்டம்.!
இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று மாலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் வாழும் மக்களிடையே அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீவிரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள மாயபுரி பகுதியில் அமைந்துள்ள காலணிகள் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவியதை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 16 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன .
தீயணைப்பு வீரர்களின் கடுமையான மற்றும் இடைவிடாத முயற்சியால் தீ வேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது 24 மணி நேரத்திற்குள் இந்தியாவில் நடைபெறும் மூன்றாவது பெரிய தீ விபத்தாகும். நேற்று காலை கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஒரு தீ விபத்து நடந்தது. அதன்பிறகு மாலை டெல்லியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது . இன்று காலை அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.