#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கடனை கேட்டு வந்த இடத்தில் கள்ளக்காதல்... கொலையில் முடிந்த கொடூரம... மனைவி உட்பட ஐந்து பேர் கைது.!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக தலைநகரான பெங்களூருவில் அமைந்துள்ள சென்னம்பட்டினம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஹோட்டல் தொழில் செய்து வரும் அருண்குமார் தொழில் நிமித்தமாக கணேஷ் என்பவரிடம் 8 லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார்.
ஹோட்டலில் சரியான வருமானம் இல்லாததால் அவரால் வட்டியையும் அசலையும் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் ஹோட்டல் தொழிலை கைவிட்டதோடு கடனை செலுத்தாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் கொடுத்த கடனை கேட்டு அடிக்கடி கணேஷ் அருண்குமார் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் கணேஷுக்கும் அருண்குமாரின் மனைவி ரஞ்சிதாவிற்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. கணேஷ் மற்றும் ரஞ்சிதாவின் கள்ளக்காதல் பற்றிய அறிந்து அருண்குமார் இருவரையும் கண்டித்து இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் தங்களது உறவை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் தங்களது உறவிற்கு இடைஞ்சலாக இருக்கும் அருண்குமாரை கொலை செய்ய ரஞ்சிதா மற்றும் கணேஷ் தங்களது நண்பர்கள் மூன்று பேரின் உதவியுடன் திட்டம் தீட்டியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி ஹோட்டல் விவகாரம் பற்றி பேச வேண்டும் என்று அருண்குமாரை தனியே அழைத்திருக்கிறார் கணேஷ். இதனை நம்பி அருண்குமாரும் கட்டிகெரேபாளையம் என்ற இடத்திற்கு கணேஷ் சந்திக்க சென்றுள்ளார். அப்போது கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் அருண்குமாரை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அருண்குமாரின் மனைவி ரஞ்சிதாவிடம் கேட்கும்போது அவர் முன்னுக்குப் பின் முரணான பதிலை சொல்லி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்கள் வழக்கமான பாணியில் விசாரித்த போது தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ரஞ்சிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் கணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் அவர்களுக்கு உடந்தையாக இருந்த கணேசன் நண்பர்களான சிவானந்தா, சரத் மற்றும் தீபக் ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.