#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோமாவுடன் 2 வருடமாக உயிருக்கு போராடிய சிறுமி பிரிஷா மரணம்.. மரக்கிளை முறிந்து விழுந்ததில் சோகம்.!
மரக்கிளை முறிந்து தலையில் பலத்த காயத்துடன் கோமாவுக்கு சென்ற சிறுமி, 2 வருடம் கழித்து நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் இராமமூர்த்தி நகர், கடவுலஹள்ளி பகுதியை சேர்ந்த சிறுமி ரேச்சல் பிரிஷா (Rachel Prisha) வயது 10. கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் 11 ஆம் தேதி சிறுமி, தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, சாலையில் இருந்த பழமையான மரத்தின் மரக்கிளை முறிந்து கீழே விழுந்துள்ளது.
மரக்கிளை நேரடியாக சிறுமியின் மீது விழுந்ததில், அவரின் தலையில் பலத்த காயம் பட்டுள்ளது. உயிருக்கு போராடிய சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். சிறுமி தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில், அன்றைய கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், நடிகர் சுதீப்பும் வீடியோ கால் மூலமாக கோமாவில் இருக்கும் சிறுமி மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் பேசினார்.
கடந்த 2 வருடமாக கோமாவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக நேற்று உயிரிழந்துள்ளார். குடும்பத்தினர் மகளின் உடலை கட்டியணைத்து கதறி அழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. மேலும், பெங்களூர் மாநகராட்சி சார்பாக சிறுமியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.