தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
வாழும் கும்பகர்ணியாக இளம்பெண்.. மனைவி உறங்கிக்கொண்டே இருப்பதாக காவல்நிலையத்தில் சோகத்துடன் புகாரளித்த கணவர்..!
5 ஆண்டுகளாக மனைவி அபரிதமாக உறங்கிக்கொண்டு இருப்பதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மருத்துவ பிரச்சனைக்கு காவல் நிலையம் சென்ற கணவரின் நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பசவக்குடி பகுஹியை சேர்ந்தவர் இம்ரான் கான். இவரின் மனைவி ஆயிஷா. தம்பதிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், ஆயிஷா எந்த நேரமும் உறங்கிக்கொண்டு இருப்பதாக தெரியவருகிறது. அதாவது, இரவு நேர உணவு முடிந்து உறங்கினால், அவர் மறுநாள் காலை 12:30 மணிக்கு எழுவாராம்.
12:30 மணிக்கு எழுந்து தன்னால் இயன்ற வேலைகளை கவனித்துவிட்டு மாலை 05:30 மணியளவில் உறங்கும் பெண்மணி இரவு 09:30 மணிக்கு எழுகிறார்.
பின்னர், இரவு உணவு முடிந்ததும் உறங்கினால் மறுநாள் 12:30 மணிக்கு தான் எழுகிறாராம். இந்த விஷயம் தொடர்பாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.