#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்கூட படுக்கலைன்னா அவ்ளோதான்.. ஆசைக்கு இணங்க.., பரபரப்பு சம்பவம்.!
ஆசைக்கு ஒத்துழைக்காத பெண்ணை கொலை செய்ய முயன்ற வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டம் அலயங்குடி பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில், தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார்.
இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது, பண்ட்ஸ்வாலையை சேர்ந்த சிவராஜ் குலால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இளம்பெண் சிவராஜிடம் நட்பாக பழகி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அத்துடன் சிவராஜ் அவரை மனரீதியாக மிகவும் துன்புறுத்தி, ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்ததால், ஆவேசமடைந்த சிவராஜ் நேற்று முன்தினம் பெண் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது பெண் லிஃப்டில் சென்றதால் அவரை பின்தொடர்ந்து சென்ற சிவராஜ், லிப்டில் வைத்து கத்தியால் பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த இளம்பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், சிவராஜ் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சிவராஜ் மீது வழக்குப்பதிந்து தப்பியோடிய அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.