#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பழிக்குப்பழி.. தாய்ப்பாலோடு குழந்தைகளுக்கு கொலை வெறியை ஊட்டிய தாய்.. 20 ஆண்டுகள் கழித்து ஓடஓட விரட்டி கொல்லப்பட்ட ரௌடி.!
அப்பாவி கணவனை கொலை செய்து 20 ஆண்டுகளுக்கு முன் ரௌடியாக பிரபலமான தாதாவை மகன்களை வைத்து கர்ப்பிணியாக சபதமேற்று போட்டுத்தள்ளிய தாயின் பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் பல்லக்குமா நகர் பகுதியில் வசித்து வருபவர் டொக்கன் ராஜா (வயது 40). ரௌடியாக வலம்வந்த இவர் கூலிப்படை கும்பல் சி.டி மணியின் கூட்டாளியும் ஆவார். இவரின் மீது 25 வழக்குகள் இருக்கின்றன.
கடந்த டிசம்பரில் விடுதலையாகி வந்த ராஜா, மயிலாப்பூருக்கு செல்லாமல் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்துள்ளார். மயிலாப்பூரில் தனது உறவினர் மகள் வழக்கறிஞராக பதிவு செய்யவிருந்த நிலையில், அவரை வாழ்த்த மயிலாப்பூர் வந்துள்ளார்.
நேற்று இரவில் வீட்டிற்கு வெளியே வந்த ராஜாவை 6 பேர் கொண்ட கும்பல் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், 20 ஆண்டுகள் முன்பு செய்த கொலைக்கு பழிக்குப்பழியாக சம்பவம் அரங்கேற்றப்பட்டது அம்பலமானது. கடந்த 2003ம் ஆண்டு அப்பாவியான கறிக்கடைக்காரர் கதிரவன் என்பவர் டொக்கன் ராஜாவின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அப்போது, கதிரவனின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். உடன் ஒன்றரை வயது நரேஷ் குமார் என்ற குழந்தை இருந்துள்ளார். குழந்தை பிறந்ததும் அதற்கு மகேஷ் குமார் என கதிரவனின் மனைவி பெயர் சூட்டி இருக்கிறார்.
இரண்டு குழந்தைகளிடமும் டொக்கன் ராஜாவை பழிதீர்க்க வேண்டும் என சிறுவயதில் இருந்து தாய்ப்பாலோடு கொலை வெறியையும் ஊட்டி வளர்த்த தாய், தனது சபதத்தை மகன்கள் வாயிலாக நிறைவேற்றி இருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.