கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
#Breaking: காலையிலேயே வெளுத்து வாங்கப்போகும் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று வரை பல மாவட்டங்களில் கன மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இதனால் மக்கள் குளுகுளு சூழ்நிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
3 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை
இன்று காலை நிலவரப்படி, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காலை 10 மணி வரையில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கப்போகும் கனமழை; பேருந்து ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவுரை.!
இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தென்காசி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை.! குமரி மாவட்டத்தில் தயார் நிலையில் இருக்கும் தீயணைப்பு படையினர்!!