வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பெண்ணை மூர்க்கமாக முட்டிதூக்கிய எருமை; இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
சென்னையில் உள்ள திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் மதுமதி (வயது 33). இவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இன்று விடுமுறை என்பதால், குழந்தைகள் இருவரும் உறவினரின் வீட்டில் இருந்துள்ளனர். இதனிடையே, மதியம் 3 மணியளவில் குழந்தைகளுக்கு மதுமதி உணவு கொடுக்க சென்றதாக தெரியவருகிறது.
அப்போது, அங்கு இருந்த எருமை ஒன்று திடீரென மதுமதியை தாக்கியது. இந்த தாக்குதலில் மதுமதியின் ஆடை எருமையின் கொம்புகளில் சிக்கிக்கொள்ள, அவர் எருமையால் இழுத்து செல்லப்பட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிலர், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு பெண்ணை மீட்டனர்.
இதையும் படிங்க: திருமணமான ஒரேநாளில் உயிரிழந்த மணமகன்; பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த சோகங்கள்.!
25 இடங்களில் தையல்:
இந்த சம்பவத்தில் கூடுதலாக 2 பேர் காயமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு பெண்ணுக்கு மருத்துவர்கள் உடனடி சிகிச்சை அளித்த நிலையில், காயம் ஏற்பட்ட 25 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது.
எருமை தாக்குதல் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காளையின் உரிமையாளரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பதைபதைப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அவை நெஞ்சை பதறவைக்கும் வண்ணம் இருக்கின்றன. அதன் காட்சிகள் உங்களின் பார்வைக்கு..
பெண்ணை முட்டி தூக்கிய மாடு - சென்னை திருவொற்றியூரில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவத்தின் சிசிடிவி காட்சி pic.twitter.com/ufu97GxHNQ
— KS / Karthigaichelvan S (@karthickselvaa) June 17, 2024
மற்றொரு அதிர்ச்சியூட்டும் வீடியோ
சென்னை-திருவொற்றியூர் சாலையில் நடந்து சென்ற நபரை முட்டி இழுத்துச்சென்ற எருமைமாடு#CCTV #Tiruvottiyur #Buffalo #SparkMedia pic.twitter.com/s4tNzv6BW9
— Spark Media (@SparkMedia_TN) June 17, 2024
இதையும் படிங்க: #Breaking: 14 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!