#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#JustIN: அதிரடி காட்டிய பாதுகாப்புப்படை; சத்தீஸ்கரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் மாவட்டம், லேந்திரா கிராமத்தில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினர் மற்றும் நக்சல் தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கிராமம் மற்றும் அதனை சுற்றிய வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அச்சமயம், அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் தாக்குதல் நடத்த, அதிகாரிகள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். மொத்தமாக 48 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நக்சல் தடுப்புப்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது.